சொல் பொருள்
(பெ) நாடு, நிலப்பகுதி
சொல் பொருள் விளக்கம்
நாடு, நிலப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
country, province
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் அன்ன ஆயின பழனம்-தோறும் – பதி 19/16-19 பசுக்கூட்டங்கள் கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக, விளைநில இடங்களெல்லாம் களையிழக்க, உழவுத்தொழிலினை அழித்து, நீ வாழ்வு தராததால் வளம் அற்றுப்போன பகைவர் நாடுகள் அப்படிப்பட இயல்பினை அடைந்தன – நீர்நிலைகளிலெல்லாம் வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/2,3 பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்