சொல் பொருள்
(பெ) அனைவரையும் ஒரே தரத்தில் பார்த்தல்,
சொல் பொருள் விளக்கம்
அனைவரையும் ஒரே தரத்தில் பார்த்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
treating/seeing all as equal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை பலரும் வருவர் பரிசில்_மாக்கள் வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மா வண் தோன்றல் அது நற்கு அறிந்தனை ஆயின் பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121 ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைத்து, நான்கு திசையிலுமுள்ள பரிசில் மாக்கள் பலரும் வருவர் அவர் வரிசை அறிதல் அரிது.மிகவும் கொடுத்தல் எளிது, பெரிய வண்மையையுடைய தலைவனே, நீ அவ் வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின் வரிசை கருதாது அனைவரையும் ஒரு தரமாகப் பார்த்தலைத் தவிர்ப்பாயாக, அறிவுடையோரிடத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்