சொல் பொருள்
(பெ) 1. உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
2. சிறப்பில்லாச்சொல்
சொல் பொருள் விளக்கம்
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Word implying common possession, as of the world
unworthy speech or word
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொதுமொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – கலி 68/1,2 இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல, நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி குடி புறந்தருகுவை ஆயின் நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/31-34 கோள்சொல்பவர்களின் சிறப்பில்லா வார்த்தையை உட்கொள்ளாது ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து ஏனைக் குடிகளையும் பாதுகாப்பாயாயின், நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்