சொல் பொருள்
(பெ) பொதுமையுடையவள், பொதுமகள், கணிகை,
சொல் பொருள் விளக்கம்
பொதுமையுடையவள், பொதுமகள், கணிகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whore, harelet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி – பரி 20/55-58 இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு, தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால் பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும் அணிந்து, மகிழ்விக்கும், இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்