சொல் பொருள்
பொந்து – மரத்தில் உண்டாகிய ஓட்டை.
புடை – நிலத்தில் உண்டாகிய ஓட்டை.
சொல் பொருள் விளக்கம்
‘பொந்து ஆயிரம் புளி ஆயிரம்’ என்னும பழமொழி புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட ஆயிரம் ஆண்டாம்; பொந்துபட்ட பின்னும் வாழ்வது ஆயிரம் ஆண்டாம்.
புடைத்தல்-பருத்தல். வெளியில் பருத்துத் தோன்றி உள்ளே ஓட்டை இருப்பது புடையாம். புடைத்தல் பருத்தல் என்பதைக் குறித்துப் பின்னர் அதன் உள்ளே அமைந்த ஓட்டையைக் குறித்ததாம். இனிப் பொந்து பெரியதும் புடை சிறியதுமாம் ஓட்டையாம். “கிணற்றில் பொந்து புடை உள்ளன” என்னும் வழக்கு இதனைக் காட்டும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்