சொல் பொருள்
(பெ) இணைத்தல், தைத்தல்,
பொல்லம் துளைப் பொருளில் வழங்குதல் தென்னகப் பெருவழக்கு
சொல் பொருள் விளக்கம்
பொல் என்பது துளை. முறம் பெட்டி முதலியவற்றில் ஓட்டை விழுமானால் பொல்லம் பொத்துதல் (துளையை நாரால் தைத்து மூட்டுதல்) அண்மைக்காலம் வரை வழக்கு. “பொல்லம் பொத்தலையோ பொல்லம்” எனத் தெருவில் கூவி வருவார் இருந்தனர். ‘பொல்லாப் பிள்ளையார்’ மெய்கண்டார் வரலாற்றில் இடம் பெற்றவர். பொல்லல், உளிகொண்டு வேலை செய்தல். பொல்லாமை துளையாமல் தன்னிலையில் அமைந்த பிள்ளையார். பொல்லம் துளைப் பொருளில் வழங்குதல் தென்னகப் பெருவழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stitching, joining as in tailoring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்