சொல் பொருள்
1. (வி) 1. உளியால் கொத்து, 2. கிழி, 2. (பெ) உரிக்கப்பட்ட மரப்பட்டை
ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு
கடலின் ஊடும் அலைப்பகுதி, அலை இல்லாப் பகுதி இவற்றின் ஊடிடத்தைப் பொளி என்பதும், மீன்பிடி பகுதி களைப் பிரித்துப் பொளி என்பதும் மீனவர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு. கடலின் ஊடும் அலைப்பகுதி, அலை இல்லாப் பகுதி இவற்றின் ஊடிடத்தைப் பொளி என்பதும், மீன்பிடி பகுதி களைப் பிரித்துப் பொளி என்பதும் மீனவர் வழக்கு. இது குமரி மாவட்ட வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chisel, pick
tear into strips
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482 கல்லை உளியால் கொத்திக் குடைந்தது போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையை நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/15,16 நாரினையுடைய அடிமரத்தில் நீர் வரும்படி உரித்து களிற்றியானை சுவைத்துப்போகட்ட சக்கையாகிய சுள்ளிகள் பிடி பசி களைஇய பெரும் கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/2-4 (தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள் மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும் அன்புடையனவாம், தோழி! அவர் சென்ற வழியிலே. இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/6,7 கொடிய வேனிலில் தனது இனிய துணையான பெண்யானை உண்ணும்படி பட்டுப்போன கிளைகளையுடைய யா மரத்தின் உரிக்கப்பட்ட பட்டையைக் கிழித்து ஊட்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்