சொல் பொருள்
மக்கு – குப்பை, அறிவிலி
சொல் பொருள் விளக்கம்
மண்+கு – மட்கு – மக்கு என வந்ததாம். மண்ணோடு மண்ணாகிவிட்டது என்பது மக்குதலாக வழங்குகின்றதாம். மட்குதல் அறிந்தே குப்பையை எடுத்து நிலத்தில் பரப்புவர். இம்மக்குச் சொல் ‘அவன் மக்கு’ என்பதில் கூர்த்த அறிவில்லான் என்னும் பொருளில் வழங்குகின்றது. “மண்டையில் மண்ணா இருக்கிறது?” என்றும் “களிமண்ணா இருக்கிறது தலையில்?” என்றும் கூறுவதில் மண் இருத்தல் மக்கு வழிபட்டதாகலாம். அணிகலங்களில் சேரும் அழுக்கும் மக்கு எனப்படும். தச்சுத் தொழிலில் மக்கு வைத்தல் என்பது உடைவு, வெடிவுகளைப் பசை ஒட்டால் ஒட்டல்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்