சொல் பொருள்
மண்போடல்- இறந்தவரைக் குழிக்குள் வைத்து புதைகுழியை மூடல்
சொல் பொருள் விளக்கம்
மண்போடல் பொதுச் செயல், அதனை விலக்கி இறந்தவரைப் புதைத்த புதைகுழியை மூடுதற்குப் போடுவதே மண் போடலாகவும், மண் தள்ளலாகவும் வழங்குகின்றது. இடுகாட்டுக்கு வந்த அனைவரையும் அழைத்து மூன்று மூன்று கைம்மண் தள்ளச் சொல்வர். கடைசியில் மண் தள்ளிய பேற்றில் பங்குகொள்ளல் பெரும்பேறு எனவும் கருதுதல் உண்டு. வாழ்ந்த நாளில் அவருக்கு மண்போட்டவரும், இந்த மண் போடுதலால் கடன் தீர்த்துக் கொள்வதாகக் கூடக் கருதுவதும் உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்