சொல் பொருள்
(பெ) உயிரினம், மனித இனம்,
சொல் பொருள் விளக்கம்
உயிரினம், மனித இனம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
all life, humanity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3 உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில், வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/10,11 வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய அரிய போரினை அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்