சொல் பொருள்
(பெ) 1. அறிவின் திரிபு, தடுமாற்றம், 2. பிரிவுத்துன்பம், 3. ஒரு மரணச்சடங்கு, 4. கலப்பு
சொல் பொருள் விளக்கம்
அறிவின் திரிபு, தடுமாற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Mental delusion: stupor, bewilderment; aberration of mind, Pining due to separation from one’s beloved;, a funeral rite, mixture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ – கலி 147/2,3 தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ? வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/19-22 என்னோடிருந்து என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால் செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து அங்கே மையல் கொண்ட நெஞ்சத்தோடு பிரிவுத்துயரில் இருக்க, மரம் அதனைப் பார்த்து அந்தத்துன்பத்தால் தாம் பதிக்கப்பட்டது போல் இலைகளைக் குவித்துக்கொண்டதே! அது எதனாலோ? கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/4,5 பெரும் வலிமை கொண்ட யானையையும், நெடிய தேரினையும் உடைய குட்டுவன், பகைவேந்தரைக் கொல்லும்போதான மரணச்சடங்குகளில் முரசுகள் அதிர்வதைப் போல் மயக்கம் – மரணச்சடங்கினுளொன்று. (யாழ். அக.) A funeral rite – Tamil Lexicon புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே – ஐங் 260/4 புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள். மயக்கம் – பண்படுத்தப்பட்டமையான், மண்ணும் எருவும் பிறவும் கலந்த நிலம் என்க – பொ.வெ.சோமசுந்தரனார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்