சொல் பொருள்
மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர்
சொல் பொருள் விளக்கம்
உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற ஏனங்களிலோ போட்டு வைப்பது இல்லை. மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர். மரத்தால் செய்யப்பட்டது மரவை ஆகும். இது தென்னக வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்