Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீரம், 2. கொலைத்தொழில், 3. வலிமை,

சொல் பொருள் விளக்கம்

வீரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bravery, valour, murder, killing, strength, power

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 134-136

யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத வீரத்தைப் பூண்ட வாழ்க்கை

மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/18-20

வழியில் கொள்ளையர்கள் கொலைச்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில்
வந்தபோது அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில் நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்,

நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு – புறம் 40/1,2

நீ, பகைவரது பாதுகாத்த வலிமை நிலைபெற்ற அரண்களைப்
பாதுகாவாது எதிர் நின்று அழித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *