சொல் பொருள்
(வி) 1. கூர் மழுங்கு, 2. ஒளி மங்கு
சொல் பொருள் விளக்கம்
கூர் மழுங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become blunt, be dim, obscure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3 கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/1,2 விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய பரிய கதிர் ஒளி குறைந்த செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப்போதின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்