சொல் பொருள்
மழுமட்டை – அறிவின்மை, வழுக்கலான தன்மை
சொல் பொருள் விளக்கம்
மழுமழுப்பு என்பது வழுக்கல், மட்டை என்பது மடல். தென்னை பனை ஆகியவற்றின் மட்டை. “குட்டையில் ஊறப் போட்ட மட்டை” மழுமட்டை எனப்படும். மழுமழு அல்லது வழுவழுத் தன்மையுடையதாக அஃதிருக்கும். ஊறிய மட்டை போன்ற தன்மையுடையவன் மழுமட்டை என்க. ஊறப்போட்டு நார் உரிக்கப் பயன்படுவது புளிச்சைமட்டை. ஊறிய நீரையும் மழுமழுக்க வைத்துவிடும். கையால் தொடவே வழுக்கலும் நாற்றமும் உடையதாக இருக்கும் “அவன் மழுமட்டை; அவனை வைத்துக்கொண்டு எப்படி மாரடிப்பது?” என்பது வழக்குச் செய்தி.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்