சொல் பொருள்
(பெ) 1. மேல்தளங்களைக் கொண்ட வீடு, 2. அரண்மனை போன்றவற்றின் மாடிப்பகுதி, 3. பள்ளி ஓடம், 4. மொட்டை மாடி,
சொல் பொருள் விளக்கம்
மேல்தளங்களைக் கொண்ட வீடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
storied house, upper storey, a kind of boat, terrace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71 மாடிவீடுகள் மிகுந்திருக்கும் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 355,356 முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு, வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில் கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6 கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறைக்கண், நாவாய் ஓட்டுவான் மாடத்தின் மீதுள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27 புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும் விண் பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 348-350 விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது மாடத்தில், இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்