மாற்றார் என்பதன் பொருள் பகைவர்.
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து – குறள் 868
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்
மா இரு விசும்பில் பன் மீன் ஒளி கெட ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/12-14 கரிய பெரிய வானத்தே பலவாகிய விண்மீன்களின் ஒளி கெட்டுப்போக ஞாயிறு எழுந்து தோன்றியதைப் போல, பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி மாற்றார் என்னும் பெயர் பெற்று - புறம் 26/17 மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே - கலி 106/50
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்