சொல் பொருள்
(பெ) திருமால்,
சொல் பொருள் விளக்கம்
(பெ) திருமாலிருங்குன்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a hill called azhagarmalai near Madurai
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் – பரி 15/22-24 சிலம்பாற்றினை அழகு செய்ய, அழகு பொருந்திய திரு என்ற சொல்லோடும் சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றத்தில் மக்கள் தாம் விரும்பும் இச்சைகளை உன்முன்னே விதைத்து, அதன் விளைவான பயனைக் கொள்வர்; மதுரைக்குக் கிழக்கே 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அழகர் மலை என்று வழங்கும் இடம், இரண்டு அழகர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது. ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள்; மற்றொருவர், ‘என்றும் இளையாய் அழகியாய்’ என்று போற்றப்படும் முருகன். சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு. பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது. அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும் சொல்வர். மதுரையைச் சுற்றிச் சமணர்கள் வாழ்ந்த எட்டுக் குன்றுகளில் இது இருங்குன்றம் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்