Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இளமை, 2. மாவடு,

சொல் பொருள் விளக்கம்

இளமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

youth

tender unripe mango fruit

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் – கலி 131/12,13

இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத்
தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய்,

மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8

மாவடுப் போன்ற கண்ணினையும் முத்துவடம் அசையும் அழகிய முலையினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *