சொல் பொருள்
முகங்கொடுத்தல் – பார்த்தல்
சொல் பொருள் விளக்கம்
செவிகொடுத்தல், கேட்டல் பொருள் தருவது போல முகங்கொடுத்தல் என்பது பார்த்தல் பொருளதாம். “முகங்கொடுத்துப் பார்க்கிறானா?” என்பதோர் ஏக்க வினா “முகங்கொடுத்தே பாராதவன் தானா/ அகங் கொடுத்துப் பார்க்கப் போகிறான்” என்பது தெளிவு விடை. முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது பழமொழி. என் முகத்தை நான் கண்ணாடியால் காணலாம். அது போலவே என் முன்னால் இருப்பவர் முகத்தின் வழியேயும் என் முகத்தைக் காணலாம். அவர் முகம் நகைப்புடன் இருந்தால் என் முகமும் அத்தகையது என்றும் அவர் முகம் கடுகடுத்திருந்தால் என் முகமும் அத்தகைத்து என்றும் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்துக் கொள்ளலாம் என்பதே அது.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்