சொல் பொருள்
கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை
சொல் பொருள் விளக்கம்
கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய பெயர் குரங்குக் கட்டை. வண்டியின் முகப்பில் அதன் பாதுகாப்பாக இருத்தலால் முற்காணி, முக்காணி ஆயது. முகக்காணி முக்காணி எனினுமாம். வண்டியின் பின்னாலும் தாங்கு கட்டை உண்டு. தேனி வட்டார வழக்கு முக்காணி என்பது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்