சொல் பொருள்
செய்து முடிப்பவர், முடிச்சுப்போடுபவர்
சொல் பொருள் விளக்கம்
செய்து முடிப்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who accomplishes
one who knots
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3 எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர், செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மது 514,515 செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும், பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்