Skip to content

சொல் பொருள்

விரைந்து செல், விரைவான இயக்கம்

சொல் பொருள் விளக்கம்

விரைந்து செல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hasten, move quickly, quick movement

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10

முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2

குன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க;

பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/20-22

தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *