சொல் பொருள்
இக்கட்டு, சங்கடம்,
சொல் பொருள் விளக்கம்
இக்கட்டு, சங்கடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
predicament
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ட கடவுளர் தம்முளும் நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும் சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல் நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/29-36 நீ கண்ட கடவுள்களுக்குள், உன்னுடைய மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும் சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே! உன்னைத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! ஒருவேளை நீ செல்லாமல் இருந்துவிட்டால் உன் நல்ல மாலையையுடைய மார்பினில் ஒன்றாக ஒட்டியிருக்கும்படி பொருந்திக்கிடந்த நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுளர் எல்லார்க்கும் சங்கடம் ஏற்படவும் செய்யும்”.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்