சொல் பொருள்
அடிப்பாகம், முதல்வன், தலைவன், தொடக்கம், வேர், கிழங்கு,
முதன்மை, வேர், பழம், விதை, சொத்து, நாற்று
சொல் பொருள் விளக்கம்
முதன்மை, வேர், பழம், விதை, சொத்து எனப் பொருள் தரும் சொல் முதல் என்பது. அது நாற்று என்னும் பொருளில் உழவர் சொல்லாக வழங்குகின்றது. நெல் நாற்று ஒன்றுக்கு, ஆயிரமாய் விளைவது எண்ணத்தக்கது. விளைவைக் கண்டு முதல் என்பதும் எண்ணத்தக்கது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
base, foot, bottom, chief, head, beginning, root
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 60,61 மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும், அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு குட முதல் குன்றம் சேர குண முதல் நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 546-548 (மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு, மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கிழக்கில் அடிவானத்தில் (பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால், ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12 பாதுகாப்பானது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் வழி. சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46 சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12 காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி முதல் சேம்பின் முளை இஞ்சி – பட் 19 கிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்