Skip to content

சொல் பொருள்

முதுநிலம், வரண்ட பாழ் நிலம்

சொல் பொருள் விளக்கம்

முதுநிலம், வரண்ட பாழ் நிலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

barren tract, waste land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/4,5

வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர்
போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக்
கொத்திக்கொணரும்

வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/4-6

வெம்மை மிக
இடிகளை உமிழும் மேகம் நீங்கி எவ்விடத்தும்
குடிகள் தத்தம் பதிகளிலிருந்து பெயர்ந்து போகறு ஏதுவாக பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *