சொல் பொருள்
(பெ.அ) அறிவு வாய்க்கப்பெற்ற
சொல் பொருள் விளக்கம்
அறிவு வாய்க்கப்பெற்ற
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
possessing intelligence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு வரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய் கோடியர் முழவின் ததும்பி – குறு 78/1,2 பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய எனலும் ஆம்.- உ.வே.சா விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்