சொல் பொருள்
பாவைத் திருமணத்தில் வரும் ஆண்பாவை,
சொல் பொருள் விளக்கம்
பாவைத் திருமணத்தில் வரும் ஆண்பாவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the puppet bridegroom in children’s marriage play
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்_கால் சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/19-21 வருத்தம் இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ? இதனைச் சிறுமுத்தன் என்று அழைப்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்