Skip to content

சொல் பொருள்

முத்தமிடு, சிப்பியிலிருந்து கிடைப்பது, கண்ணீர்த்துளி

சொல் பொருள் விளக்கம்

முத்தமிடு, சிப்பியிலிருந்து கிடைப்பது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

kiss, pearl, tears

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல்மாக்களொடு – புறம் 41/14,15

தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்ணை முத்தங்கொண்டு, தம் மனைவியர்க்குத்
தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்துன்பத்தையுடைய ஆடவரோடு

முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/6

முத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன்

பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23

பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *