சொல் பொருள்
(வி) 1. வெறு, 2. சினம்கொள்,
சொல் பொருள் விளக்கம்
வெறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hate, dislike, be angry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/1,2 கம்பத்தை வெறுத்து நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானயோடு, பந்தியை வெறுத்து காற்றுப்போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து மகளிரை மைந்து உற்று அமர்பு_உற்ற மைந்தர் அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் முடி பொருள் அன்று முனியல் முனியல் – பரி 20/91-93 மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவரின் மார்பினைக் கடிந்து ஒதுக்குவோம் என்று சொல்வது குலமகளிர் யாருக்கேனும் முடிந்த முடிவு அன்று, சினங்கொள்ளவேண்டாம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்