சொல் பொருள்
(பெ) 1. கருத்து, எண்ணம், 2. குறிப்பு
சொல் பொருள் விளக்கம்
கருத்து, எண்ணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thought, intention, sign, gesture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் நசை வேட்கையின் இரவலர் வருகுவர் அது முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/24-26 நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7 “ஏடா! நீ உன் குறிப்பினால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்