1. சொல் பொருள்
(வி) முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று,
2. சொல் பொருள் விளக்கம்
முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
accomplish, finish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து முரசு செய முரச்சி களிறு பல பூட்டி ஒழுகை உய்த்தோய் – பதி 44/14-17 பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி, அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே! முரசு செய முரச்சி என்றது, அவ்வேம்பினை முரசாகச் செய்யும்படி முற்றுவித்து என்றவாறு. முற்றுவித்தலாவது ஒழுகை ஏற்றலாம்படி துண்டங்களாகத் தரிப்பித்தல் – ஔவை.சு.து. உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்