சொல் பொருள்
(வி) 1. ஒடி, முறி, 2. வளைவு, கூனல்,
சொல் பொருள் விளக்கம்
ஒடி, முறி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
break off, snap off, bend
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99 விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி நல்ல அடுப்பில் வாய்ப்பகுதியில் மூன்று குமிழ்கள் இருக்கும். நாளாக ஆக, அந்தக் குமிழ்கள் தேய்ந்தும் உடைந்தும் போகும். அவ்வாறான அடுப்பே முரி அடுப்பு எனப்படும். போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி – கலி 94/22 “போ! சீச்சீ! குறைபட்ட மக்கள் வடிவே! இனி நீ இந்நிலையைக் கைவிடு!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்