சொல் பொருள்
முருங்கைக்காய் – மெலிவு
சொல் பொருள் விளக்கம்
முருங்கைக்காய் நீளமானது; கனமில்லாதது; எளிதில் ஒடிவது. மரமும் எளிதில் நெடுநெடு என வளரும்; வலுவிராது; எளிய காற்றின் சுழற்சிக்கும் கிளையோடு ஓடியும்; அடியோடு சாயும். இத்தன்மைகளை அறிந்தவர்கள் உடல் வலுவின்றி வளர்ந்தவர்களை ‘முருங்கைக்காய்’ என்பது வழக்கு. முருங்கைக் காய் பிஞ்சாக இருக்கும்போது நீண்டிருத்தலும், காற்றில் ஆடலும் காண்பார். இவ்வுடைமையை மிகத் தெளிவாக உணர்வர். “உடல் சதையில்லாமல் முருங்கைக்காய் போல நெடுநெடு என வளர்ந்து விட்டான்” என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்