Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,  2. குருத்து,

சொல் பொருள் விளக்கம்

மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the white tender bottom of a quill

the white soft bottom of the stem of grass plants

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11

மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும், சிவந்த வாயினையும்

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2

பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *