சொல் பொருள்
முழுகாதிருத்தல் – கருக்கொண்டு இருத்தல்
சொல் பொருள் விளக்கம்
திங்கள் தோறும் மகளிர்க்கு வரும் முழுக்கு, விலக்கின் வழியே வருவது. அம்முழுக்கு நின்று விடுதலைக் குறிப்பது முழுகா திருத்தல் என்பதாம். முழுகாதிருப்பின் கருக்கொண்டு வயிறு வாய்த்துளாள் என்பது குறிப்பாம். ஆகவே முழுகுதல் என்பது பொது நீராடலையும், ஆடவர் நீராடலையும் விலக்கி மாதவிலக்கு முழுகுதலைக் குறித்ததாயிற்றாம். அம்முழுக்குக் கொள்ளாமையே முழுகாதிருத்தலாம். முழுகாதிருக்கிறேன் என்ற செய்தியைக் கேட்ட அளவில் உன்னை முழுகி விட்டேன் என்னும் உட்கோளரும் உளர். அவர் முழுகிக் குளித்தவர்; அதனால் நடுக்கம் இல்லை!
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்