சொல் பொருள்
மூச்சு – பேசாதே
சொல் பொருள் விளக்கம்
‘மூச்சு’ என்றாலே அழுகையை அடக்கு; வாயைத் திறவாதே; பேசாதே என்னும் பொருளைத் தரும் வழக்குகள் உள. அழும் குழந்தை, ஓயாது பேசும் குழந்தை ஆகியவற்றை அடக்க ‘மூச்சு’ என்பர்! அக்குறிப்பை அறிந்த குழந்தை வாயை ஒடுக்கும் அழுகையை நிறுத்தும். அச்சப்பொருள் தரும் கட்டளைச் சொல் ‘மூச்சு’ என்பதாம். ஓர் அரற்று அரற்றியதும், “காச்சு மூச்செல்லாம் அடங்கிப் போயிற்று” என்பதில் ஆரவாரத்தை அடக்குதல் பொருள் உள்ளது. ‘மூச்சு’ என்பதில் மூச்சு விடாமைப் பொருள் இல்லை என்பதை அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்