சொல் பொருள்
தீ மூளச்செய், பற்றவை, செலுத்து
சொல் பொருள் விளக்கம்
தீ மூளச்செய், பற்றவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make a fire, kindle a flame, cause to enter, put into
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/63,64 புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி, திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும் கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/2,3 கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல, ஞாயிறு மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்