சொல் பொருள்
மெல்லாமல் – நன்றாகப் பல்லால் அரைக்காமல்.
கொள்ளாமல் – வாய் கொள்ளும் அளவு இல்லாமல்.
சொல் பொருள் விளக்கம்
சில பிள்ளைகள் பண்டத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வாயில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டு இருப்பர். அவர்களை இப்படி ‘மெல்லாமல் கொள்ளாமல்’ தின்றால் வயிற்றுக்கு ஆகாது எனக் கடிந்து மென்று தின்னச் சொல்வர்.
மெல்லுதல் அரைப்பதுடன் உமிழ்நீர் சேர்வதற்கும் வாய்ப்பாம். கொள்ளுதல் மெல்லுவதற்கு வாய்ப்பாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்