சொல் பொருள்
பொருந்திய, மேவும் என்பதன் திரிபு, இன்னிசை அளபெடை, மேலுள்ள, இன்னிசை அளபெடை – பொருந்திய
சொல் பொருள் விளக்கம்
பொருந்திய, மேவும் என்பதன் திரிபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be fitted, change of one letter into another in syntactic coalescence of the word ‘mevum’, covering, fitted on
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1 பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்துப் பொருந்திய தோலை ஒத்த – மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது – ந.மு.வே.நாட்டார் உரை, விளக்கம் இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1 பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்து மேலுள்ள தோலை ஒத்த பார்க்க : மேம் -1 இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1 பெரிய கழியின்கண் வாழ்கின்ற முதலையினது முதுகிலே பொருந்திய தோல் போன்ற – மேவும் என்னும் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்து ஈற்று உயிர் மெய் கெட்டு மேம் என நின்று ‘இன்னிசை நிரைப்ப மேஎம்’ என அளபெடுத்தது – பொ. வே. சோமசுந்தரனார் உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்