சொல் பொருள்
மேடேறுதல் – மேனிலையடைதல், கடன் தீர்தல்
சொல் பொருள் விளக்கம்
பள்ளத்தில் இருந்து மேடேறுதல் பெரும்பாடு. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு வருதல் எளிமை. மேடேறப் பெருமுயற்சி வேண்டும். முயற்சியில்லாமல் இருந்தாலே போதும். பள்ளத்திற்கு உருண்டு வந்துவிடலாம். ஆதலால் மேடேறுதல் அருமை புலப்படும். மேட்டைக் குறியாமல் தொழில் பதவி படிப்பு ஆகியவற்றில் மேனிலையடைதல், பட்ட கடன் குழியில் இருந்து தீர்த்து மேனிலையடைதல் என்பவை மேடேறலாகக் கொள்ளப்படும்போது வழக்குச் சொல்லாம். ஏதாவது நெருக்கடிச் செலவு நேருங்கால் இந்த ஆண்டு போகட்டும்; அடுத்த ஆண்டு மேடேறிக் கொண்டு பார்க்கலாம் என்பதில் மேடேறல், வளமை பெறல் பொருள் உள்ளதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்