சொல் பொருள்
உடம்பு, நிறம்
சொல் பொருள் விளக்கம்
உடம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
body, colour, complexion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 2,3 செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய் தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 148-151 மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும், அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும், மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்