Skip to content

சொல் பொருள்

மேலாகு, சிறந்து விளங்கு,

சொல் பொருள் விளக்கம்

மேலாகு, சிறந்து விளங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rise high as in status, be great

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

எல்லா ஊர்களிலும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழைய ஊர்

தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே – குறு 125/3,4

தழையையுடுத்த அல்குலையுடைய மகளிர் பலருள்ளும்
திருவிழாவைப் போன்று மேன்மையுற்றுத் திகழ்ந்த எனது பெண்மை நலம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *