Skip to content

சொல் பொருள்

மேய்ச்சல் – வருவாய்

சொல் பொருள் விளக்கம்

ஆடு மாடு, மேய்தல் உடையவை; மேய்ப்புத் தொழிலும், மேய்ப்பரும், மேய்ச்சல் புலமும் உண்மை அறிந்தவை. இவ்வாடு மாடு மேய்தலை விடுத்துப் போனபோன இடங்களிலெல்லாம் வருவாய் தேடிக்கொண்டு வருவதை “மேய்ச்சல்” என்பதும் ‘நல்ல மேய்ச்சல்’ என்பதும் வழக்கு. “அவனுக்கு என்ன எங்கே போனாலும் மேய்ச்சலுக்குக் குறைவு இல்லை; நமக்குத்தான் காய்ச்சல்” என்பர். மேய்ச்சல் என்பது வருவாய்ப் பொருளும், காய்ச்சல் என்பது வருவாயின்மைப் பொருளும் தருவனவாம்.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *