சொல் பொருள்
(பெ) ஒரு பறவை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு பறவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a bird
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வங்கா கடந்த செம் கால் பேடை எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது குழல் இசை குரல குறும் பல அகவும் – குறு 151/1-3 ஆண் வங்காப்பறவை நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்கா புல்லூறு என்னும் பறவை தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல் குழல் போன்று இசைக்கும் குரலையுடைய அது குறிய பல ஓசைகளை எழுப்பும் இதன் பெயர் மாம்பழக்குருவி என்பார் ஓர் ஆய்வாளர். வங்கா என்கிற மாம்பழக்குருவிப் பற்றி குறுந்தொகை(151), நற்றிணை (341) ஆகிய சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது – து.ரோசி தமிழ்த்துறைத் தலைவர் – http://siragu.com/பறவைகள்/
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்