சொல் பொருள்
(பெ) ஒரு சேர மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேர மன்னன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு புலியினம் மடிந்த கல் அளை போல துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்- புறம் 398/8-11 அவரவர் வரிசை அறிந்து புரவுக்கடன் செலுத்திய வாய்மையே மொழியும் சேரமான் வஞ்சனுடைய இன்பம் செய்பவராகிய பாணர் முதலாயினோரும் நட்புடைய வேந்தராயினோரும் செல்ல இயலுதலன்றி பகைவருக்கு புலியினம் கிடந்துறங்கும் கல்முழைஞ்சு போல நெருங்குதற்கு ஆகாத பெரும் பெயரையுடைய மூதூர் இவன் இப்பாடலில் பறை இசை அருவி பாயல் கோ எனப்படுகிறான். பாயல் என்பது ஒரு மலையின் பெயர். அதுவே இவன் ஆண்ட பகுதிக்கு ஆகி, இவனது நாடு பாயல் நாடு எனப்பட்டது. அது இப்போது வயநாடு எனப்படுகிறது. இவனது ஆட்சி வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த அஞ்சனாடு முடிய இருந்தது. இச் சேரமான் தொகை நூல்கலுள் காணப்படும் சேர வேந்தருள் மிகவும் பழையோன் என்பர் ஔவை.சு.து.அவர்கள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்