சொல் பொருள்
(வி) ஒரு காரணமாக உயிர்துறக்கத் துணிந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு வடக்கு நோக்கு
அமர்ந்திரு,
சொல் பொருள் விளக்கம்
ஒரு காரணமாக உயிர்துறக்கத் துணிந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு வடக்கு நோக்கு
அமர்ந்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sit facing north, taking a vow of fasting to death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன் ஈங்கு – புறம் 65/9-11 தன்னை ஒக்கும் வேந்தன் முன்னாகக் கருதி எறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி, மறக்கூறுபாட்டையுடைய மன்னன் வாளோடு வடக்கிருந்தான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்