சொல் பொருள்
(பெ) 1. வடக்கிலுள்ளது, 2. வட காற்று, வாடை,
சொல் பொருள் விளக்கம்
வடக்கிலுள்ளது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is in north, north wind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175 வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து அசைந்து, தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய, தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/4 குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்