சொல் பொருள்
(பெ) 1. கொடுமை, இரக்கமின்மை, 2. கடுமை, 3. வீரத்தனமை, மனவுரம்,
சொல் பொருள் விளக்கம்
கொடுமை, இரக்கமின்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cruelty, heartlessness, sternness, Bravery, fortitude
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/3,4 விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர் வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61 வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர் வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182 வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன் – நச். உரை – தறுகண்மை – அஞ்சாமையையுடைய வீரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்