சொல் பொருள்
(பெ) 1. சிங்கம், கரடி முதலிய வலிய விலங்குகள், 2. குதிரை
சொல் பொருள் விளக்கம்
சிங்கம், கரடி முதலிய வலிய விலங்குகள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strong animals like lion, bear etc., horse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூட்டு உறை வயமா புலியொடு குழும – மது 677 கூட்டில் உறைகின்ற (சிங்கம், கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க, முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு பணை நிலை முணைஇய வயமா புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே – ஐங் 449/1-3 சரளைக் கற்கள் நிரம்பிய மேட்டுநிலம் பிளக்குமாறு இயங்கும் சக்கரங்களோடு, கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று, திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்